(Poem) க கா கன்றாவி

0
84

(Mohamed Nizous)

கல்யாண வீடு போக
கடையில வாங்கின சேர்ட்
கலர் மெட்ச்சா இல்லண்ணு
கமண்ட் செய்த திருமதி
கபேர்ட்டில் இருக்கின்ற
கணக்கான சேர்ட் எடுக்க
கருப்பாக அதில் ஏதோ
கன்றாவி பட்டிருக்கும்.
கழுவி லேசாக
காயப் போட்டெடுத்தால்
காகம் அதில் நின்று
கக்கா போயிருக்கும்.
கஷ்டப்பட்டு நீக்கிப் பின்
கடகடன்னு அயன் செய்ய
கரண்டு கட்டாகும்
கடுப்பு செற்றாகும்.
காத்திருந்து பின்னாலே
கரண்டு வந்து அயன் பண்ண
கால் ஆடும் பிளக்
கடுப்பில் எண்ணெய் ஊற்றும்.
கவனமாய் பிடித்து
கடைசி வரை போராடி
கரை கண்ட பின்னாலே
கையைப் போடுகையில்
கழன்று விழும் ஒரு பட்டன்.
கன்றாவி பட்டன் உருண்டு
கதிரையின் அடி சென்று
காணாமல் மறையும்.
கை போட்டுத் துளாவி
கஷ்டப் பட்டெடுத்தபின்
கையால தைக்கப் போக
காணாமல் போயிருக்கும்
கலண்டரில் இருந்த ஊசி.
கடைசியில் மெட்சில்லாத
கடை சேர்ட்டைப் போட்டுக் கொண்டு
கல்யாண ஹோல்க்குப் போக
காவலாளி நகைத்துக் கேட்பான்
கார்ட்டைப் பார்க்கலியா
கல்யாணம் இன்றில்லை நாளை.

LEAVE A REPLY