குரு பிரதீபா பிரபா விருது பெற்ற சிரேஷ்ட கணிதப் பாட ஆசான் வித்தியாகீர்த்தி அமீர் அலி ஆசிரியரை கௌரவிக்கும் நிகழ்வு

0
741

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு குரு பிரதீபா பிரபா விருது பெற்ற காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் சிரேஷ்ட கணிதப் பாட ஆசான் வித்தியாகீர்த்தி எம்.எம்.அமீர் அலி ஆசிரியரை கௌரவிக்கும் நிகழ்வும்,சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வும் 06-10-2016 நேற்று வியாழக்கிழமை காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் மௌலவிய்யா நயீமா அப்துல் சலாம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சிரேஷ்ட கணிதப் பாட ஆசான் வித்தியாகீர்த்தி எம்.எம்.அமீர் அலி,காத்தான்குடி 1ம் குறித்தி பெரிய மீரா ஜும்மாப் பள்ளிவாயல் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திக்குழுவின் செயலாளர் என்.எம்.ஏ.கரீம் உட்பட அதன் உறுப்பினர்கள், ஸாவியா மகளிர் வித்தியாலய ஆசிரிய,ஆசிரியைகள்,மாணவ,மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது குரு பிரதீபா பிரபா விருது பெற்ற சிரேஷ்ட கணிதப் பாட ஆசான் வித்தியாகீர்த்தி அமீர் அலி ஆசிரியர் பெரிய மீரா ஜும்மாப் பள்ளிவாயல் தலைவர் சுபைரினால் பொன்னாடை போர்த்தப்பட்டு ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் மௌலவிய்யா நயீமா அப்துல் சலாமினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் தரம் 6,7,8,9,10, ஆகிய வகுப்பு மாணவர்களினால் பரிசும்,விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு சர்வதேச ஆசிரியர் தினத்தை பாடசாலை ஆசிரியர்கள் சார்பாக ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் மௌலவிய்யா நயீமா அப்துல் சலாம் ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் ஜனாபா முபீனாவினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதில் ஸாவியா மகளிர் வித்தியாலய ஆசிரிய மற்றும் மாணவ ,மாணவிகளின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கவிதை,பாடல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY