கிழக்கு மாகாணத்துக்குள்ளேயே நியமனங்களை நியமித்து தாருங்கள்: கல்வியற் கல்வி ஆசிரியர்கள்

0
198

20161006_102726(ஹஸ்பர் ஏ ஹலீம்)

கடந்த செவ்வாய்க்கிழமை(04) தேசிய கல்வியற் கல்லுாரி ஆசிரியர் நியமானது கொழும்பில் வைத்து வழங்கப்பட்டது.

இதனை தமது சொந்த மாகாணமான கிழக்கு மாகாணத்துக்குள் நியமித்து தருமாறு நேற்று(06) நியமனம் பெற்ற ஆசிரியர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் அவரது மாகாண அலுவலகத்தில் வைத்து வேண்டுகோள் விடுத்தனர்.

மொத்தமாக நியமனம் பெற்றுள்ள 3225 பேரில் தமிழ் மொழி மூலமானவர்கள் 1014 பேர். இதில் 194 பேரே சொந்த மாகாணத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். மிகுதி நியமனங்கள் மாகாணத்துக்கு வெளியில் நியமனம் பெற்றதால் இவர்களையும் கிழக்கு மாகாணத்துக்குள் நியமிக்குமாறு கோரிக்கை அடங்கிய மகஜர் மாகாண முதலமைச்சரிடம் கையளிக்ப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர்,

தான் இது தொடர்பாக பிரதமர் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் நானும் எமது மாகாண கல்வி அமைச்சரும் நாளை கொழும்புக்குச் சென்று கதைப்பதாகவும் முடிவினை சாதகமாக மாற்றி சொந்த மாகாணத்துக்குள் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY