சைவ உணவக கொள்ளை சம்பவம்; மூன்று பேர் கைது

0
480

Arrest(வாழைச்சேனை நிருபர்)

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் காமாட்சி கிராமம் சவுக்கடி வீதியில் உள்ள சைவ உணவகம் ஒன்று கடந்த 2016.09.03ம் திகதி உடைத்து கொள்ளையிடப்பட்ட சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் நேற்று முன்தினம் (05) மாலை கைது செய்ப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தீர்க்கப்படாத குற்றச் செயல்கள் விசாரனை பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ.ஏ.வஹாப் தெரிவித்தார்.

சவுக்கடி வீதி காமாட்சி கிராமத்தில் அமைந்துள்ள ‘அக்ஷதை’ சைவ உணவகம் கடந்த 03.09.2016ம் திகதி அன்று உடைக்கப்பட்டு அதில் இருந்து நாட்பத்தி மூவாயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டதாக உணவகத்தின் உரிமையாளரால் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இச் சம்பவம் தொடர்பாக விசாரனையை மேற்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட தீர்க்கப்படாத குற்றச் செயல்கள் விசாரனை பிரிவினர் நேற்று முன்தினம் மாலை ஏறாவூர் பொலிஸ் பிரிவில் மைலம்பாவலி பிரதேசத்தை சேர்ந்த 26, 33, 38 வயதுடைய மூன்று சந்தேக நபர்களை கைது செய்து மேலதிக விசாரனைகளுக்காக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ.ஏ.வஹாப் தெரிவித்தார்.

LEAVE A REPLY