அட்டாளைச்சேனையில் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு

0
137

ஆசிரியர்கள் ஆசிரிய தொழிலை கடமைக்காக மட்டும் மேற்கொள்ளாமல் மன திருப்தியுடன்செயற்படுகின்ற போது மற்றவர்களினால் நமது சேவை மதிக்கப்படுவதோடு இலக்குகளையும் இலகுவாக அடையமுடியும் என அட்டாளைச்சேனை தேசியக் கல்வி கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் தெரிவித்தார்.

உலக ஆசிரிய தினத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை இக்றஃ வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியரை கௌரவிக்கும்
விழா தேசகீர்த்திஎம்.எஸ்.உதுமாலெப்பை மண்டபத்தில் அதிபர் ஏ.எல்.யாசீன் தலைமையில் இன்று நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையில் பீடாதிபதி நவாஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்விக்காக தன்னை அர்பணித்து செயற்பட்டு வரும் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ், அட்டாளைச்சேனை பிரதேச கல்வி பணிப்பாளர் எம்.ஏ.சீ.கஸ்ஸாலி, அதிபர் ஏ.எல்.யாசின் உட்பட ஆசிரிய குழாத்தினர் பாடசாலை அபிவிருத்தி குழுவினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY