5ம் ஆண்டு புலமை பரீட்சை: காத்தான்குடி மெத்தைபள்ளி வித்தியாலயம் பின்னடைய காரணம் என்ன?

0
1296

முஹம்மட் பர்சாத்-

வெளியாகிய 2016ம் ஆண்டுக்கான 5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சைக்காண பெறுபேறுகள் வெளிவந்ததை தொடர்ந்து பாடசாலைக்கான பாராட்டுக்களும் மாணவர்களுக்கான பாராட்டுக்களும் சமூகவலயதளங்களிலும் ஏனைய இணைவலைகளிலும் குவிந்த வன்னமே உள்ளது.

ஆனால் 5ம் ஆண்டு புலமைப்பரீட்சைகளில் கடந்த ஆண்டுகளில் பல சாதனைகளை படைத்த மெத்தைப்பள்ளி வித்தியாலயம் இம்முறை பின்னைடந்த ஒரு உண்மையான ஒளிந்திருக்கும் சோகக் கதையை இங்கு நான் பகிர்ந்து பகிர்ந்துகொள்கிறேன்.

5ம் ஆண்டு என்றாலே தாய்,தகப்பன் உற்பட ஆசிரியர்கள் உற்பட அனைவரும் தங்களது பிள்ளைகள் மீது அதிக அக்கறை செலுத்துவம் பாடசாலை முன்னேற ஆசிரியர்கள் அக்கறை செலுத்துவம் வழமையாகும்.

மெத்தை பள்ளி வித்தியாலயம் கடந்த ஆண்டுகளை விட இம்முறை இப் பாடசாலையின் புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் மிகவும் பின் அடைந்துள்ள எனலாம். இதற்கு ஒரு பிரதான காரணம் ஒன்று உள்ளது தொடர்ச்சியாக வாசிக்கவும்.

2016ம் ஆண்டிக்கான புலமைப்பரீட்சைகாக இம்முறை மெத்தை பள்ளி வித்தியாலயத்தில் இம்முறை சுமார் 55 மாணவர்கள் தோற்றுவிக்கப்பட்டார்கள். இருந்தும் வெளியாகிய பரீட்சை பெறுபேறுகளின் படி 02 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள். கடந்த ஆண்டு 2012ம் ஆண்டு 14 மாணவர்கள் 2013ம் ஆண்டு 15மாணவர்களும் 2014ம் ஆண்டு 10மாணவர்களும் 2015ம் ஆண்டு 8 மாணவர்களும் சித்தியடைந்துள்ளார்கள்.

இம்முறை சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பேற வேண்டும் என்ற நோக்கில்  பாடசாலை நிர்வாகம் முன்னைடுத்து இருந்தது.

இருந்தாலும் துரதிர்ஷ்டம்…

இம்முறை 2016ம் ஆண்டு மெத்தைப்பள்ளி வித்தியால்த்தில் 5ம் ஆண்டு புலமைபரீட்சைக்காக மாணவர்கள் மீது ஆசிரியை சபீலா, அதிகம் கவனம் செலுத்தி கற்பித்து வந்துள்ளார். அந்த ஆசிரியை 5ம் ஆண்டு மாணவர்களின் பாதுகாவலர்களை அழைத்து 5ம் ஆண்டு புலமைபரீட்சை இருப்பதால் பிள்ளைகளின் நலனுக்காக சிலவேளை பிள்ளைகளை தண்டிக்க வேண்டி ஏற்படும். அதற்கு மாணவர்களின் பாதுகாவலர்கள் அனுமதி தந்தால் மாத்திரம் தன்டித்து கற்பிக்க முடியும் என தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பாதுகாவலர்களும் அனுமதி அளித்துள்ளனர்.

அந்த வகையில் 5ம் ஆண்டு புலமைபரீட்சை எழுதுவற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு கடந்த ரமழான் காலப்பகுதியில் 5ம் ஆண்டு மாணவர்களுக்கு விஷேட வகுப்புகளை ஏற்பாடு செய்துகற்பித்துள்ளார்.

அதன்போது ஒரு மாணவனை ஆசிரியை தண்டித்துள்ளார். பின்னர் இந்த விடயம் மாணவன் தாக்கப்பட்டான் என்ற செய்திகள் தலைப்பு செய்தியாவும், கட்டுரையாகவும் செய்திகளை பிரசுரித்தது ஒரு ஊடகம்.

அதனால் அந்த மாணவனின் பாதுகாலர்கள் உற்பட அப்பிரதேச சண்டியர்களால் அந்த ஆசிரியை பலத்த வார்த்தை பிரயோகங்களுக்கும் மத்தியில் தாக்கப்பட்டார்.

குறித்த சம்பவத்தினால் மிக மனவேதனை அடைந்த ஆசிரியை மன உளைச்சளினால் மெத்தைபள்ளி வித்தியாலயத்தின் 5ம் ஆண்டு மாணவர்களுக்கு கல்வி கற்பிற்கும் விடயத்தை நிறுத்தி கொண்டார். அதன்பின் அந்த மாணவர்களின் 5ம் ஆண்டு புலமை பரீட்சை எழுத வேண்டிய இறுதி இரண்டு மாதங்கள் அம்மாணவர்களின் கல்விக்கான காலங்கள் வீணடிக்கப்பட்டதுடன், மாணவர்களின் இறுதிநேர கல்வியை சரியான முறையில் தொடரமுடியவில்லை, எனவும் இதனால் தங்களது பிள்ளைகளின் 5ம் ஆண்டு பெறுபேறுகள் தங்களுக்கு திருப்தி அழிக்கவில்லை கவலையுடன் தெரிவிக்கின்றனர் மாணவர்களின் பாதுகாவலர்கள்.

அன்று ஒரு மாணவன் தண்டிக்கப்பட்ட சிறு சம்பவத்தாலும் அதன் நடைபெற்ற விபரீதங்களாலும் இன்று தங்களது எதிர்பார்ப்புக்களை இழுந்து நிற்கின்றனர் மெத்தைபள்ளி வித்தியாலய மாணவர்கள்.

அன்று நடபெற்ற அந்த சிறுசம்பவம் ஊடகத்தினாலையே பெரிதாக ஊதப்பட்டும் சமுக வலைத்தளங்களில் விமர்சனங்கள அள்ளி வீசப்பட்டும் இந்த விபரீதம் ஏற்பட்டது. இவ்வாறான சந்தர்பங்களில் ஊடகவியலார்கள், ஊடகங்கள் மாணவர்களின் பாதுகாவலர்கள் மிக பொறுப்புடன்  நடந்து கொள்ள வேண்டும்.

அன்று மிக பொறுப்புடன் இவர்கள் நடந்துகொண்டு இருந்தால் மெத்தை பள்ளிவித்தியாலயத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் 5ம் பரீட்சையில் சித்தி அடைந்தார்கள் என்று மெத்தை பள்ளி வித்தியாலயமும் பெருமிதம் அடைந்து இருக்க முடியும்.

(பாடசாலை அதிபரும் அவ்வாறான  பெறுபேரைத்தான் எதிர்பார்த்தும் இருந்தார்)

இம்முறை 5ம் ஆண்டு புலமைபரீட்சை எழுதிய மெத்தை பள்ளி வித்தியாலயத்தின் மாணவர்கள் 1ம் ஆண்டு தொடக்கம் 5ம் ஆண்டுவரை தவனை பரீட்சைகளில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 01 முதல் இடத்தை பிடித்து தனது திறமையை வெளிக்காட்டி இருந்தனர், அப்படியான திறமையான மாணவர்கள் ஆவார்.

ஆனால் இன்று தமது பெறுபேறுகளை பார்த்து கவலை அடைந்துள்ளனர் பாதுகாவலர்களும்,மாணவர்களும் பாடசாலை நிர்வாகத்தினரும்.

LEAVE A REPLY