3வது ஒரு நாள் போட்டி: பாகிஸ்தான் 136 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி

0
216

பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி அபுதாபியில் நேற்று பகல்-இரவாக நடந்தது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன் குவித்தது.

பாபர் ஆசம் சிறப்பாக விளையாடி ‘ஹாட்ரிக்‘ சதம் அடித்தார். அவர் 106 பந்துகளை சந்தித்து 117 ரன் (8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். பாபர்ஆசம் ஏற்கனவே முதல் ஒரு நாள் போட்டியில் 120 ரன்னும் 2-வது ஒரு நாள் போட்டியில் 123 ரன்னும் எடுத்து இருந்தார். ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து 3 சதங்களை எடுத்த 8-வது வீரர் பாபர் ஆசம் ஆவார்.

இதேபோல் தொடக்க வீரரும், கேப்டனுமான அசார்அலியும் சதம் அடித்தார். அவர் 109 பந்தில் 101 ரன் எடுத்தார்.

பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 44 ஓவரில் 172 ரன்னில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் 136 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ராம்தின் அதிகபட்சமாக 37 ரன்னும், பிராத் வெயிட் 32 ரன்னும் எடுத்தனர். முகமது நவாஸ் 3 விக் கெட்டும், வகாப் ரியாஸ் 2 விக்கெட்டும் இமாத் வாசிம், சோனகல்கான், சோயிப் மாலிக் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் தொடரை வென்று வெஸ்ட் இண்டீசை ஒயிட் வாஷ் செய்தது. ஏற்கனவே 20 ஓவர் தொடரையும், பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் தொடரிலும், ஒரு நாள் தொடரிலும் ஒரு ஆட்டத்தில் கூட வெல்ல முடியாமல் போனது பரிதாபமே.

இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் டெஸ்ட் வருகிற 13-ந்தேதி துபாயில் தொடங்குகிறது.

LEAVE A REPLY