Coffee விஷம் கலந்து தோழியை கொன்ற இந்தோனேசிய பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை

0
116

இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவைச் சேர்ந்தவர்கள் மிர்னா சலிகின், ஜெசிகா வாங்சோ. தோழிகளான இவர்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பில்லி ப்ளூ வடிவமைப்பு கல்லூரியில் இணைந்து பயின்றுள்ளனர். இருவரும் ஒன்றாகவே தங்கியிருந்தனர்.

கடந்த 2015-ம் ஆண்டு மிர்னா தனது தோழியின் நலன் கருதி, ஜெசிகா காதலித்து வந்த நபர் போதை மருந்துக்கு அடிமையானவர் என கூறி காதலை கைவிடும்படி கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஜெசிகா மிர்னாவிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் அவர்களின் நட்பு முறிந்தது.

இருப்பினும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மிர்னாவை தீர்த்துக் கட்ட முடிவு செய்த ஜெசிகா, கடந்த ஜனவரி மாதம் ஒரு ஓட்டலுக்கு அழைத்துள்ளார். அங்கு காபி அருந்திய மிர்னா உயிரிழந்துவிட்டார். மிர்னா வருவதற்கு முன்னதாகவே அவருக்கு மிகவும் பிடித்தமான காபியை ஜெசிகா ஆர்டர் செய்து வரவழைத்து அதில் விஷம் கலந்து கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, ஜெசிகா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இதில் திடீர் திருப்பமாக ஆஸ்திரேலிய போலீசாரும் வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் ஆவணங்களை கொடுத்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக கோர்ட்டில் நடைபெறும் விசாரணை வாரந்தோறும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றவாளி ஜெசிகா செய்த குற்றத்திற்காக அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

ஜெசிகாவின் வழக்கறிஞர் கூறும்போது, ‘ஜெசிகாதான் அவரது தோழிக்கு காபியில் விஷம் கலந்தார் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை. வெறும் வார்த்தைகளால் மட்டுமே அரசு தரப்பு நிரூபித்துள்ளது’ என்றார்.

-Malai Malar-

LEAVE A REPLY