சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தில் கணனி தொழிநுட்ப பயிற்ச்சி செயலமர்வு

0
326

(எம்.எம்.ஜபீர்)

தேசிய வாசிப்பு மாத்தை முன்னிட்டு சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தில் வாசகர்களுக்கான கணனி தொழிநுட்ப பயிற்ச்சி செயலமர்வு இன்று வியாழக்கிழமை நூலக கணனி ஆய்வு கூடத்தில் இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபை செயலாளரும் விசேட ஆணையாளருமான ஏ.ஏ.சலீமின் வழிகாட்டலில் நடைபெற்ற நிகழ்வில் அம்பாரை பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலக சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.வாஹிட், சம்மாந்துறை அமீர் அலி நூலகர்களான ஐ.எல்.எம்.ஹனீபா, ஏ.எல்.எம்.முஸ்தாக், வாசகர்கள், நூலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் இச் செயலமர்வினை வளவாளராக ஜே.மஹ்தி அலி நடாத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.

சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள நூலக வாசகர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கணனி தொழிநுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் இச் செயலமர்வு நடைபெற்றமை குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY