சீன நாட்டு பொறியியலாளர் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி

0
66

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை.யான் ஓயா திட்டத்தில் கடமையாற்றிய பொறியியலாளர் அத்திட்டத்தில் சேவையாற்றிய சாரதியொருவரினால் தாக்கப்பட்ட நிலையில் கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காயமடைந்தவர் வாகல்கட-யான் ஓயா திட்டத்தில் கடமையாற்றிய பொறியியலாளர் டோன்ங் ஜெனொவி DONG JINOWEI (32வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது அத்திட்டத்தில் கடமையாற்றிய சாரதி நேற்றைய தினம் குறிப்பு புத்தகத்தில் கையொப்பம் பெற்றுக்கொள்ளாத நிலையில் இன்றைய தினம் விசாரித்த போது தாக்குதல் நடாத்தியதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையின் தெரியவந்துள்ளது.

தாக்குதல் நடாத்தியதாக கூறப்படும் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY