உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் Hack செய்யப்பட்டால், நீங்கள் செய்ய வேண்டியது.?

0
306

“உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது” – இப்படியான ஒரு மெசேஜை யாருமே விரும்ப மாட்டார்கள், இன்னும் சொல்லப்போனால் முகநூல் பிரியர்களுக்கு இதுவோரு ஒரு பயங்கரமான பகல்கனவிற்கு சமம்..! சரி ஒருவேளை நீங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ள செய்தி கிடைக்கும் போது நீங்கள் தானாக முன்வந்து உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டை மீட்க முடியும். அதற்கு நீங்கள் விரைவில் செய்யப்பட வேண்டும். அது சார்ந்த எளிய தந்திரங்களை பற்றிய தொகுப்பே இது.

காப்பாற்றிக் கொள்ள..
ஹேக் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக இருக்க / காப்பாற்றிக் கொள்ள, எப்போதுமே இறுக்கமான ப்ரைவஸி செட்டிங்ஸ் மற்றும் ஒரு வழக்கமான அடிப்படையில் கடவுச்சொல்லை புதுப்பிக்க வேண்டியது அவசியம். மீறி ஒருவேளை உங்கள் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக உணர்ந்தால் உடனடியாக இவைகளை நிகழ்த்தவும்.

பாஸ்வேர்ட்டை மாற்றவும்
உங்கள் அக்கவுண்ட்டை மீட்க முதல் விடயமாக உங்கள் கடவுச்சொல்லை மாற்றவும். ஹோம் > அக்கவுண்ட் செட்டிங்ஸ் > ஜெனரல் > பாஸ்வேர்ட் ஆப்ஷன் கிளிக் செய்து இருப்பு பாஸ்வேர்ட்தனை உறுதி செய்த பின்னர் புதிய பாஸ்வேர்ட்தனை சமர்ப்பிக்கவும்.

பாஸ்வேர்ட் ரீசெட் செய்யவும்
ஒருவேளை உங்கள் கடவுச்சொல் மாற்றப்பட்ட பின்பும் உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்நுழைய முடியவில்லை எனில் உங்கள் கடவுச்சொல்லை ரீசெட் செய்வது தான் ஒரே வழி. பாஸ்வேர்ட்தனை ஹோம் பக்கத்தில் ரீசெட் செய்யலாம் அதை க்ளிக் செய்வதன் மூலம் பதிவு செய்யபட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு இணைப்பு அனுப்பி வைக்கப்படும். அந்த இணைப்பை கிளிக் செய்து ஒரு புதிய கடவுச்சொல்லை உள்ளிடவும், உங்கள் கணக்கை மீட்டெடுக்கலாம்.

LEAVE A REPLY