ஒபாமா நர­கத்­துக்குச் செல்வார் – பிலிப்பைன்ஸ் ஜனா­தி­பதி

0
354

அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா நரகத்­துக்குச் செல்வார் என பிலிப்பைன்ஸ் ஜனா­திபதி ரொட்­ரிகோ டுடெர்டே தெரி­வித்­துள்ளார்.

அமெரிக்க அரசு குறிப்பிட்ட ஆயுதங்களை பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு விற்பனை செய்ய மறுத்துள்ளது இந்­நி­லை­யி­லேயே பிலிப்­பைன்ஸ் ஜனா­தி­பதி ரொட்­ரிகோ நேற்று முன்­தினம் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அமெரிக்கா தங்களுக்கு ஆயுதம் விற்பனை செய்யவில்லை என்றாலும் கவலை இல்லை, சீனா மற்றும் ரஷ்யா ஆயுதங்களை தங்களுக்கு விற்பனை செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ரொட்­ரிகோ டுடெர்டே கூறி­யுள்ளார்.

சீனாவை பொறுத்தவரை, ஒருமுறை வந்து ஒப்பந்தமிட்டு செல்லுங்கள், உங்கள் நாட்டுக்­கு ஆயுதங்களை கொண்டுவந்து தருகிறோம் என கூறுகின்றனர்.

மேலும், தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா மூக்கை நுழைக்கும் என்றால், அந்த நாட்டுடனான உறவை முறித்துக்கொள்ளவும் தான் தயங்குவதில்லை என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உண்மையில் போதை மருந்து கடத்தல் மற்றும் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்க முயற்சி மேற்கொண்டுவரும் பிலிப்பைன்ஸூக்­கு அமெரிக்கா ஆதரவளிக்க வேண்டும்.

ஆனால் எங்களுக்கு உதவுவதில் அமெரிக்கா முனைப்பு காட்டவில்லை. எங்களுக்கு ஆயுதம் வழங்க விருப்பமில்லாத அமெரிக்க ஜனா­தி­ப­தி ஒபாமா நரகத்திற்கு தான் செல்வார் என விமர்சித்துள்ளார்.

-Metro News-

LEAVE A REPLY