தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 371 ரன்கள் குவித்தனர். அந்த அணியில் டேவிட் வார்னர்(117), கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சதம் அடித்து அசத்தினர்.
பின்னர் 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. கடின இலக்கு என்பதால் தொடக்க வீர்ர்களாக களமிறங்கிய டி காக் மற்றும் அம்லா சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர்.
டி காக்(70), ஆம்லா(45) ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 6 விக்கெட் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்கா அணி 49.2 ஓவர்களில் 372 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.
அதிரடியாக விளையாடி சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்ட மில்லர் (118) ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டனார். 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 3-ல் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.
-Malai Malar-