சாய்ந்தமருது கலை இலக்கிய விழா; பிரதேச செயலாளர் சலீமுக்கு விசேட கௌரவம்!

0
135

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பிரதேச கலை இலக்கிய விழா நேற்று புதன்கிழமை பொலிவேரியன் கலாசார மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலகமும் கலாசார அதிகார சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இவ்விழா கலாசார அதிகார சபையின் பிரதித் தலைவர் கவிஞர் ஏ.பீர்முஹம்மத் தலைமையில் இடம்பெற்றது.

இதில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாகவும் அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது நிர்வாக நேர்மைக்கு கலைகளின் மரியாதை எனும் தொனிப்பொருளில் சட்டம், ஒழுங்கு அமைச்சின் மேலதிக செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் செல்லவுள்ள பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பாராட்டி கௌரவிக்கபட்டார். இது தொடர்பான சிறப்புரையை கவிஞர் நவாஸ் சௌபி நிகழ்த்தியதுடன் கவிஞர் தீரன் ஆர்.எம்.நௌசாத் கவி வாழ்த்து பாடினார்.

அத்துடன் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பல அரங்கேற்றப்பட்டதுடன் “மருதம் கவிதைகள்” நூல் வெளியீடு, பரிசளிப்பு என்பனவும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் மண்டபம் நிறைந்த பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY