மகனின் தாக்குதலினால் தந்தை அப்துல் ரவூப் வபாத்: கிண்ணியாவில் சம்பவம்

0
814

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை-கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் மகனின் தாக்குதலினால் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தந்தை நேற்று மாலை (05) திருகோணமலை பொது வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா-ஆலங்கேணி, சமாஜந்தீவு பகுதியைச்சேர்ந்த அப்துல் ரவூப் (45வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கடந்த மாதம் 04ம் திகதி ரவூப் முஜீப் (26 வயது) என்பவர் தனது தந்தையின் தலைக்கு பொல்லால் தாக்கிய நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

தந்தையை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் மகன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தந்தை சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

ஜனாஸா சட்ட வைத்திய நிபுணரின் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பரிசோதனை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY