காத்தான்குடிக்கு பெருமை: 5 ‘குருபிரதீபா பிரபா’ விருதுகள் கிடைத்தது!

0
867

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி அமைச்சு வருடாந்தம் ‘குருபிரதீபா பிரபா’ விருதினை வழங்கி வருகின்றது. அந்தவகையில் 2016 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று காலை கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந் நிகழ்வில் 279 அதிபர்களும் 513 ஆசிரியர்களுமாக மொத்தம் 792 பேர் கௌரவிக்கப்பட்டனர். இவர்களில் காத்தான்குடி பிரதேச பாடசாலைகளில் கடமையாற்றும் ஒரு அதிபரும் நான்கு ஆசிரியர்களும் விருது பெற்றனர்.
விருதுபெற்ற மட்டு. மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி பிரதேச

அதிபர் மற்றும் ஆசிரியர்கள் விபரம் வருமாறு
(படத்தில் இடமிருந்து வலமாக)

* அசனார் மஹ்றூப் (ஆசிரியர், மட்/மம/மீரா பாலிகா மகா வித்)
* முகம்மது மீராசாகிபு அமீர் அலி (ஆசிரியர், மட்/மம/ஸாவியா மகளிர் மகா வித்)
* முகம்மது காஸீம் முகம்மது அப்துல் சத்தார் (அதிபர், மட்/மம/மீரா பாலிகா மகா வித்)
* முகம்மது சதக்கத்துல்லாஹ் அலி அக்பர் (ஆசிரியர், மட்/மம/மத்திய கல்லூரி)
* முகம்மது காசீம் சகீலா (ஆசிரியர், மட்/மம/மத்திய கல்லூரி)

LEAVE A REPLY