(Video) TV விவாத நிகழ்ச்சியில் முஸ்தபா ரஷீதை ஷூவால் தாக்கிய வழக்கறிஞர்

0
178

எகிப்திய தொலைக்காட்சி நேரடி விவாதத்தின் போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த இமாம் முஸ்தபா ரஷீத் ஷூவால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏ டி.வி.யில் நேரலையாக நடந்து கொண்டிருந்த ஒரு விவாத நிகழ்ச்சியின் போது வழக்கறிஞர் நபிக் அல் வாஸ்க் இமாம் முஸ்தபா ரஷீத் மீது தாக்குதலில் ஈடுபட்டார்.

விவாதத்தின் போது, முஸ்தபா ரஷீத், முக்காடு ஒரு கலாச்சார பாரம்பரியமாக இருந்தாலும் அது மதத்தால் திணிக்கப்படுகின்ற ஒரு கடமை என குறிப்பிட்டார்.

குறித்த கருத்தால் அதிருப்தியடைந்த வழக்கறிஞர் தனது ஷூவை கழட்டி இமாம் முஸ்தபா ரஷீத் மீது தாக்குதலில் ஈடுபட்டார். உடனே தொலைகாட்சி ஊழியர்கள் தலையிட்டு நிலைமையை அமைதிப்படுத்தினர்.

இதில், கேமிராமேன் காயமடைந்தார். சம்பவத்தை தொடர்ந்து இமாம் முஸ்தபா ரஷீத் உடனே ஸ்டுடியோவை விட்டு வெளியேறினார்.

LEAVE A REPLY