மேற்கு ஹேய்ட்டியை புரட்டிப்போட்ட மேத்யூ சூறாவளி

0
120

மேற்கு ஹேய்ட்டியை மேத்யூ சூறாவளி கடுமையாகத் தாக்கியுள்ளது. கன மழை பெய்துகொண்டிருக்கிறது. ஆக்ரோஷமான அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றன. மணிக்கு 200கிமீ வேகத்திற்கும் மேல் புயல் காற்று வீசிக் கொண்டிருக்கிறது .

சில கடலோரப் பகுதிகள் ஏற்கனவே மூழ்கிவிட்டன என செய்திகள் வரும் நிலையில் துறைமுக நகரான லே கேயில் உள்ள தெருக்களில் ஒரு மீட்டர் உயரத்திற்கு மழை நீர் சூழ்ந்துள்ளது; சூறைக் காற்றால் வீட்டின் கூரைகள் அடித்துச் செல்லப்பட்டன.

போர்ட் சலுட்டில் உள்ள ஒரு வீட்டில் சூறாவளி காற்று அடித்ததில் ஒருவர் பலியாகியுள்ளார்; பாதிக்கப்பட்டவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவரின் படுக்கையைவிட்டு வேறு புகலிடத்திற்கு அவரால் செல்ல முடியவில்லை.

அருகில் உள்ள டொமினிக் குடியரசில், கன மழையில் வீடு இடிந்துவிழுந்து இரண்டு குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

கியூபா, பஹாமஸ் மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகள் வரும் நாட்களில் புயல் தாக்குதலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.

ஃப்ளோரிடா மற்றும் வடக்கு கரோலினாவில் கடற்கரை பகுதிகளில் அவசர கால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

-BBC-

LEAVE A REPLY