லிபியாவில் இருந்து வந்த அகதிகள் படகில் மூச்சு திணறி 22 பேர் பலி

0
129

உள்நாட்டு போர் நடைபெறும் லிபியாவில் இருந்து தினந்தோறும் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகளில் மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் படகு கடலில் மூழ்கி உயிரிழக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று லிபியாவில் இருந்து ஒரு அகதிகள் படகு மத்திய தரைக் கடலில் வந்து கொண்டிருந்தது. 3 அடுக்குகளை கொண்ட அந்த படகில் 1000-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

காற்று அதிகவேகமாக வீசியதால் அப்படகு நடுக்கடலில் தத்தளித்தது. அதை அறிந்த இத்தாலி கடற்படை மீட்பு குழுவினர் கப்பலில் சென்று அதில் இருந்தவர்களை மீட்டனர்.

அவர்களில் 22 பேர் இறந்து பிணமாக கிடந்தனர். படகில் அளவுக்கு மீறி ஆட்கள் ஏற்றப்பட்டதால் மூச்சு திணறி அவர்கள் இறந்தது தெரிய வந்தது.

மேலும், மத்திய தரைக் கடலில் 33 படகுகளில் அகதிகளாக வந்தவர்களும் மீட்கப்பட்டனர். அவர்களில் 6 பேர் உயிரிழந்து இருந்தனர். அவர்கள் தவிர 4,655 அகதிகள் மீட்கப்பட்டதாக இத்தாலி கடற்படை தெரிவித்துள்ளது.

-Malai Malar-

LEAVE A REPLY