தரம் 5 சித்தியடையாத பலர் இன்று கல்வியில் உச்ச நிலைக்கு சென்றிருக்கிறார்கள்

0
310

-ரிம்சி ஜலீல்

நேற்றிரவு வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் அதே நேரம் பரீட்சையில் தன்னம்பிக்கையுடன் தோற்றிய மாணவர்களுக்கும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக வடமேல் மாகாணசபை உறுப்பினரும் உயர்நீதிமன்ற சட்டத்தரணியுமான றிஸ்வி ஜவஹர்ஷா தெரிவித்துள்ளார்.

மேலும் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில்…

பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை நாம் எந்தளவிற்கு பாராட்டுகின்றோமோ அதே போல பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களையும் பாராட்டி அவர்களுக்கு உற்சாகமளிக்க வேண்டும். பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களை குறை சொல்வதோ அல்லது அவர்களுடைய மனதை பாதிக்கும் வகையில் பெற்றோர்களோ அவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களோ நடந்து கொள்ளக்கூடாது.

மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவது தன்னம்பிக்கையுடன் வரவேற்கக்கூடிய ஒரு விடயமாக கருத வேண்டும்.விசேடமாக பெற்றோர்கள் மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.

தரம் 5 சித்தியடையாத பல மாணவர்கள் இன்று கல்வியில் உச்ச நிலைக்கு சென்றிருப்பதை நாம் காண்கின்றோம். எனவே இது ஒரு பரீட்சை மாத்திரமே மாணவர்களின் வாழ்க்கை அல்ல. பாசாலைகளில் பாராட்டு விழாக்களை சித்தியடைந்தவர்களுக்கு ஏற்பாடு செய்கின்ற பொழுது இந்த பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

விசேடமாக பாடசாலை நிர்வாகம் இவ்வாறான நிகழ்ச்சிகளை ஏற்படுத்துகின்ற பொழுது சித்திடையந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற முக்கியத்துவத்தை அங்கு பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கும் வழங்கப்படுவதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். ஏனெனில் அநேகமான பாடசாலைகளில் சித்தியடைந்தவர்களைவிட சித்தியடையாத மாணவர்கள் அதிகமானவர்களாக இருப்பார்கள்.

எனவே இவற்றை கருத்தில் கொண்டு செயல்படுமாறும் அவர் வேண்டுகோள் ஒன்றைவிடுத்துள்ளார்.

LEAVE A REPLY