முற்சக்கர வண்டி-கார் விபத்து; ஒருவர் பலி; உப்புவெளியில் சம்பவம்

0
122

murder kill crime accident(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை-உப்புவௌி பொலிஸ் நிலைய வாகன திருத்துமிடத்திற்கு முன்னால் முற்சக்கர வண்டி இரண்டும் காரொன்றும் மோதியதில் முற்சக்கர வண்டியின் சாரதியொருவர் இன்று (05) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை-பாம் வீதியைச்சேர்ந்த எஸ்.ஜெயஹரன் (28 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சாரதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவௌி பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY