புலமை பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் புத்தளம் மாவட்டத்தில் எம்.ஆர்.பாதில் முதலிடம்.

0
440

(கரீம் ஏ. மிஸ்காத்)

புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வரும் எம். ஆர். பாதிர். புலமைப் பரிசில் பரீட்சையில் 183 புள்ளிகளைப் பெற்று, புத்தளம் மாவட்டத்தில் தமிழ் மொழிப்பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார்.

இவரிடம் நாம் உரையாடிய போது.:

இவ்வாறு முதலிடம் பெற்றதற்கு முதற்கண் அல்லாஹ்விற்கு நன்றி கூறிய பாதிர் , தான் இப்பரீட்சையில் நல்ல பெறுபேற்றை பெற்றக்கொள்ள பக்கபலமாக செயல்பட்ட ஆசிரியர்கள், தனது பெற்றோர்களுக்கும் நன்றி கூறினார்.

மேலும் இவரின் அடுத்த இலக்காக தான் குர்ஆனை மனனம் செய்து ஹாபிழ் ஆவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும். கல்வித்துறையில் ஒரு வைத்தியராக வரவேண்டும். எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவர் புத்தளத்தை சேர்ந்த ஏ.சி.எம். றிஸ்வான், சர்மிளா ஆகியோரின் புதல்வரும் ஆவார்.

LEAVE A REPLY