நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினருக்கும் (NFGG) பிரித்தானிய உயர் ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு

0
190

இந்த சந்திப்பு 04.10.2016 செவ்வாயன்று காலை, காத்தான்குடியிலுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) பிராந்திய அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் திரு. ஜேம்ஸ் டொரிஸ் மற்றும் உயர் ஸ்தானிகராலய அரசியல் பகுதி அதிகாரி ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக எம்.ஏ.சீ.எம்.ஜவாஹிர், எம்.பீ.எம். பிர்தௌஸ், சிராஜ் மஷ்ஹூர், எம்.எம்.ஜனூப், எம்.ஏ.சீ.எம். மிஹ்லார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய அரசியலமைப்பு, அரசியல் தீர்வு, நிலைமாறு கால நீதி, முஸ்லிம்-தமிழ் மக்களது எதிர்பார்ப்புகள், வடக்கு-கிழக்கு இணைப்பு – பிரிப்பு விவகாரம், சர்வதேச சமூகத்தின் வகிபாகம் போன்ற பல விடயங்கள் தொடர்பாக இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் திரு. லக்ஷ்மன் கதிர்காமரின் உரையிலிருந்து தொகுக்கப்பட்ட ‘Muslims Should be Heard’ நூலின் பிரதியொன்று, இதன்போது உயர் ஸ்தானிகருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

LEAVE A REPLY