(Poem) ஸ்’கொல’சிப்

0
226

(Mohamed Nizous)

சித்தி செய் கொடுமையிலும்
சிறுவர்க்கு மிக வலிக்கும்
சித்தி ஆக இல்லை என்று
சேர்ந்திருப்போர் செய் கொடுமை.

புத்திரனை நோக்கி
புத்தி போதா எனச் சொல்லல்
குத்திக் கிழிக்கும்
பெத்த பிள்ளை இதயத்தை.

சொந்தப் பிள்ளையிடம்
சோதனையில் தோற்றதற்கு
உன்தப்பு எனச் சொல்லல்
உள்ளத்தை உடைத்து விடும்.

பாஸான பிள்ளைக்கு
பாராட்டும் சில ஆட்கள்
லூசான பிள்ளைபோல்
லுக்குவார் தோற்றவனை

சின்னப் பிஞ்சுகளை
சிதைக்கின்றார் வதைக்கின்றார்
என்ன பாவம் செய்தார்
இந்தப் பிள்ளைகள்.

பெற்றோரே பெரியோரே
பெற்ற மார்க்ஸ் போதா என
சிட்டுக் குருவிகளின்
சிறகை ஒடிக்காதீர்.

ஒட்டி உறவாடி
உள்ளத்தை பண்படுத்தி
தட்டிக் கொடுப்போம் – அவர்கள்
தளராமல் இருப்பதற்கு.

LEAVE A REPLY