கிழக்கு மாகாண ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்திற்கு நியமித்துத் தாருங்கள் – இம்ரான் எம்.பி கோரிக்கை

0
129

கிழக்கு மாகாண ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்திற்கு நியமித்துத் தாருங்கள் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கல்விக் கல்லூரி பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களுக்கு இன்று ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நமது நல்லாட்சி அரசாங்கம் மற்றுமொரு தொகுதியினருக்கு தொழில்வாய்ப்பு வழங்கியுள்ளமை முக்கிய நிகழ்வாகும்.

இந்நிலையில் இந்த நியமனங்கள் கிடைக்கப்பெற்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தோர் தாம் வெளி மாகாணத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக என்னிடம் முறையிட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு வெற்றிடம் இருக்கின்றது. இந்நிலையில் எமது ஆசிரிய வளங்கள் கிழக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்படாது வெளி மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளமையால் எமது மாணவர்கள் தொடர்ந்து பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

எனவே இந்த விடயங்களைக் கவனத்தில் கொண்டு கிழக்கு மாகாண ஆசிரியர்கள் அவரவர் மாவட்டங்களில் கடமையாற்றக் கூடியவகையில் மீள் ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.என அவர் அக்கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY