நாங்கள் இப்போது கலை, கலாசாரம், பண்பாடு என்பவற்றில் இருந்து மாறி விலகிக் கொண்டிருக்கின்றோம்: மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்

0
435

(வாழைச்சேனை நிருபர்)

நாங்கள் இப்போது கலை, கலாசாரம், பண்பாடு என்பவற்றில் இருந்து மாறி விலகிக் கொண்டிருக்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

கோறளைப்பற்று பிரதேச செயலக கலாசார பேரவை நடாத்தும் முத்தமிழ் விழா பேத்தாளை குகனேசன் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.

எமது வரலாற்றிலே இயல் இசை நாடகம் என்ற முத்தமிலின் நூல்களில் சரித்திரம், வரலாறுகளை படித்து ஆய்வு செய்கின்றவர்கள் நாங்கள். எங்களது நூல்கள் ஆய்வு செய்வதில் நம்மவர்களை விட வெளிநாட்டவர்களே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

அமெரிக்க விஞ்ஞானிகள், ஐரோப்பிய பேராசிரியர் உட்பட தமிழ் நூல்களை படித்து அதனை ஆய்வு செய்து திருக்குறளையும் கற்று இருக்கின்ற இக்கால கட்டத்தில் நாங்கள் இப்போது கலை, கலாசாரம், பண்பாடு என்பவற்றில் இருந்து மாறி விலகிக் கொண்டிருக்கின்றோம்.

தற்போது வானொலி மற்றும் தொலைக்காட்சியில் பாட்டு கேட்கும் போது அது தமிழ் பாடலா என்ற ஐயம் என் மனதில் தோன்றுகின்றது. அதில் வரும் சொற்கள் எந்த அகராதியில் இருந்து எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

ஒலி எவ்வாறு உருவாகியது, ஒலியை தமிழர்கள் எவ்வாறு அடையாளப்படுத்திக் கொண்டோம். ஓம் என்ற சத்தம் இந்த பிரபஞ்சத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது என்ற விடயங்களை எல்லாம் புரிந்து கொண்ட நாங்கள் இன்று அதனை மறந்து மறைத்துக் கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறான நிலையினால் சமூகத்தின் சாவக்கேடாகத்தான் கருத வேண்டும். இதைவிட வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் சிலர் தமிழர்கள் என்றும், இலங்கையர் என்றும் சொல்வது தங்களுக்கு கௌரவக் குறைவாக உள்ளது என்பதை நான் நேரில் கண்டு கொண்டுள்ளேன்.

மட்டக்களப்புக்கு ஐரோப்பிய நாட்டு குழுவுடன் வருகை தந்த பெண்மணி கனடா நாட்டின் பிரஜை. அவர் வடக்கு மாகாணத்தை சேர்ந்தவராக இருக்கும் என்ற கணிப்பில் கேட்டபோது நான் கனேடிய பிரஜை எனது nhற்றோர் ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில்; வாழ்ந்திருக்கலாம் என்றார் இதுதான் இரண்டாவது தரப்பில் இருந்து வரும் பதிலாகு இருக்கும் என்றார்.

LEAVE A REPLY