முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை இன்று மீண்டும் அறிக்கை

0
683

இந்திய தமிழக முதல்–அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22–ந் தேதி இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்ட அவர் உடனடியாக சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவ்வப்போது மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்டு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 30–ந் தேதி முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் ஆஸ்பத்திரியில் நிபுணரான டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே வரவழைக்கப்பட்டார். அவரும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்ததுடன், சிகிச்சையில் சில மாற்றங்களையும் கூறினார்.

அவரது ஆலோசனையின் பேரில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நேற்று முன்தினம் முதல் முன்னேற்றம் ஏற்படத்தொடங்கியது. தொடர்ந்து அதே முறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் ஜெயலலிதாவின் உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு அப்பல்லோ ஆஸ்பத்திரியின் தலைமை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்–அமைச்சரின் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. அவருக்கு தேவையான நோய் எதிர்ப்பு மருந்துகள், சுவாச உதவி மற்றும் தொடர்புடைய அனைத்து மருத்துவ உதவிகளும் கிருமி தொற்று சிகிச்சைக்காக தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

முதல்–அமைச்சருக்கு வழங்கப்படும் முழுமையான சிகிச்சைக்கு அவர் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறார். டாக்டர்கள் குழுவினர் ஒன்று சேர்ந்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை கண்காணித்து வருகின்றனர். சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் இன்னும் தங்கியிருக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவுறுத்தப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது

இன்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில், வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. மருத்துவ குழுவினர் தொடர்ந்து அவரது உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர்.முதல்வர் ஜெயலலிதா மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற அறிவுரை வழங்கபட்டு உள்ளது. கூறப்பட்டு உள்ளது.

-Daily Thanti-

LEAVE A REPLY