மாடுகளை திருடிய சந்தேக நபர்கள் விளக்கமறியலில்…

0
146

(அப்துல்சலாம் யாசீம்-)

ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுற்குற்பட்ட துடுவெவ பகுதியில் 85 மாடுகளை திருடிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூன்று பேரையும் இன்று (04) கெப்பித்திகொள்ளாவ மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் டி.ஜே.பிரபாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இம்மாதம் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் திருகோணமலை-ரொட்டவெவ பகுதியைச்சேர்ந்த அபூபக்கர் ரபீக் (48 வயது) சாவுல் ஹமீது சஹிர்தீன் (36 வயது) மற்றும் ஹொரவ்பொத்தான.துடுவெவ பகுதியைச்சேர்ந்த ஜயதிலககே ஜீவந்த ஜெயதிலக (23 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது- மேய்ச்சலுக்காக சென்ற 85 மாடுகளைக்காண வில்லையென மாட்டு உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

துடுவெவ காட்டுப்பகுதிக்குள் மேய்ச்சலுக்காக வந்த மாடுகளை கன்தளாய் பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மாடுகளை திருடி காட்டு வழியூடாக கொண்டு சென்ற பிரதான சந்தேக நபரான அபூபக்கர் ரபீக் (48 வயது) என்பவரை கைது செய்து விசாரணை செய்த போதே மாடுகள் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

திருடப்பட்ட மாடுகளை கன்தளாய் பிர தேசத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக ஆரம்ப விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

ஆனாலும் திருகோணமலை.மொறவெவ பொலிஸ் நிலையத்தில் ஆடுகள் .மாடுகள் திருடப்பட்டுள்ளதாக பல முறைப்பாடுகளில் ரொட்டவெவ பகுதியைச்சேர்ந்தவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைணகளில் வௌிவந்துள்ளது.

LEAVE A REPLY