கிழக்கு முதலமைச்சரினால் ஏறாவூர் சிறுவர் பராமரிப்பு இல்லத்துக்கு புதிய கட்டிடம்

0
68

bedஏறாவூரில் சிறுவர் பராமரிப்பு இல்லத்தை புதிதாக நிர்மாணிப்பதற்கு நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமதினால், அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

15 இலட்ச ரூபாய் செலவில் குறித்த சிறுவர் பராமரிப்பு இல்லம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

மேலும், இதன்போது, சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் சிறுவர்களின் தேவைகளுக்கான கட்டில்கள், கதிரைகள், அலுமாரிகள் போன்ற 4 இலட்ச ரூபாய் பெறுமதியான அலுவலக உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் உட்பட பல அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY