துருக்கியில் அவசரநிலை பிரகடனம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

0
140

துருக்கி ராணுவத்தின் ஒருபிரிவினர் ஆட்சியை கவிழ்க்க கடந்த ஜூலை மாதம் நடத்திய புரட்சி, மக்களின் உதவியோடு முறியடிக்கப்பட்டது. இரு தரப்புக்கும் நடந்த பயங்கர சண்டையில் 290 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இது தொடர்பாக 3 ஆயிரம் வீரர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து சதி திட்டத்திற்கு உதவிசெய்தவர்கள் என்று கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது.

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 50,000 பேர் இதுவரை, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ராணுவ புரட்சி முயற்சிக்கு அமெரிக்காவில் வாழும் மதகுரு பெதுல்லா குலன்தான் சதி செய்துள்ளார் என்று துருக்கி குற்றம் சாட்டிவருகிறது. அமெரிக்கா அவரை நாடு கடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.

அமெரிக்கா மதகுருவை நாடு கடத்த வேண்டுமென்றால், அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இந்நிலையில் துருக்கியில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு மதகுரு பெதுல்லா குலன்தானுக்கு தொடர்புடைய ஆவணங்களை அமெரிக்காவிற்கு அனுப்பபட்டு உள்ளதாக அந்நாட்டு பிரதமர் பினாலி இல்திரிம் உறுதிசெய்தார்.

ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டதையடுத்து துருக்கியில் கடந்த ஜூலை மாதம் 3 மாதங்களுக்கு நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.

இதற்கிடையே துருக்கி ராணுவ புரட்சியில் பிற நாடுகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன் முன்னர் தெரிவித்திருந்தார். நாட்டின் ஜனநாயகத்தின்மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டி சுமார் 32 ஆயிரம் பேரை துருக்கி அரசு கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளது.

இதையடுத்து, இன்னும் ஓராண்டுகாலம் வரை அவசரநிலை சட்டம் நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், முன்னர் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை சட்டம் விரைவில் காலாவதியாக உள்ளதால் வரும் 19-ம் தேதியில் இருந்து மேலும் மூன்று மாதங்களுக்கு நாடு முழுவதும் அவசரநிலை சட்டம் நீட்டிக்கப்படும் என துருக்கி துணை பிரதமர் நுமான் குர்டுல்மஸ் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

-Malai Malar-

LEAVE A REPLY