ஜமைக்காவை மிரட்டும் புயல்: பலத்த மழை-வெள்ளப்பெருக்கு

0
40

அட்லாண்டிக் கடலில் ‘மாத்யூ’ என்ற புயல் உருவானது. எனவே மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் அமெரிக்காவில் புளோரிடா மற்றும் வடக்கு கரோலினா மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்புயல் அட்லாண்டிக் கடலில் இருந்து தெற்கு நோக்கி நகர்ந்து கரீபியன் கடலுக்கு வருகிறது. இதனால் ஹெய்டி மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகளில் பலத்த காற்று வீசுகிறது. கடுமையாக மழை பெய்கிறது. கியூபாவிலும் இதே நிலை உள்ளது.

ஹெய்டி தலைநகர் போல்ட்-அவு-பிரின்சில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜமைக்காவில் மழை கொட்டுவதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

கியூபாவில் கிழக்கு பகுதியில் உள்ள 6 மாகாணங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. வீடுகளில் தங்கியிருப்போர் மற்றும் தாழ்வான பகுதிகளில் வாழ்வோர் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY