நேருக்கு நேர் மோதி விபத்து: சாரதி கைது, இருவர் வைத்தியசாலையில் அனுமதி

0
111

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குற்பட்ட வில்பனாக்குளம் பகுதியில் டிமோபட்டாவும் மோட்டார் சைக்கிளும் இன்று (04) காலை நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காயமடைந்தவர்கள் ரொட்டவெவ- அத்தாபெந்திவெவ பகுதியைச்சேர்ந்த முதலிஹாமிகே குணரத்ன (42 வயது) மற்றும்-கோமரங்கடவெல-மடுகஹவெவ பகுதியைச்சேர்ந்த சமன்த ராஜபக்ஷ (41வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கோமரங்கடவெல பகுதியிலிருந்து வேகமாக வந்த டிமோ பட்டா வளைவில் மோட்டார் சைக்கிளில் மோதியதாகவும் லொறியின் சாரதியான திருகோணமலை-அபேபுர -லெனின் மாவத்தையைச்சேர்ந்த மரக்கல மானகே ஜகத் குனசிறி (34வயது) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சாரதியை திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY