காத்தான்குடியின் தேசிய பாடசாலைகளுக்கு இரஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விஜயம்

0
146

whatsapp-image-2016-10-04-at-11-05-20(முஹம்மட் பயாஸ்)

காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை மற்றும் மீரா பாலிகா மகளிர் தேசிய பாடசாலை ஆகியவற்றுக்கு மீழ்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் நேற்று (03) திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டார்.

பாரிய அளவில் நிர்மானிக்கப்பட்டு வருகின்ற வகுப்பறை கட்டிடங்களை பார்வையிட்டதுடன் வேலைத்திட்டங்கள் தொடர்பான அலோசனைகளையும் அறிவுருத்தல்களையும் வழங்கினார்.

இதன் போது பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் நகரமுதல்வர் SHM. அஸ்பர், அஸாபியா பசீர் ஹாஜியார், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயளாலர் றுஸ்வின் முஹம்மட் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

whatsapp-image-2016-10-04-at-11-05-13

LEAVE A REPLY