காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகதர பிரதான பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு..!

0
322

whatsapp-image-2016-10-04-at-10-35-02(முஹம்மட் பயாஸ்)

மக்களுக்கான சிறந்த சேவையை வழங்கி தனது பொலிஸ் சேவையில் அதிக பொதுப்பணிகளை செய்து விருதுகளையும் தட்டிக்கொண்டு பல பதவி உயர்வுகளையும் பெற்றுக்கொண்ட பொலிஸ் பரிசோதகரும் நிலைய பொறுப்பதிகாரியுமான ஆரிய பந்து வெதகதர, பிரதான பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வினை பெற்றுக்கொண்டதையடுத்து நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

ஊடகவியளாலர்களுடனும் பொதுமக்களுடனும் சிறப்பாக இணைந்து பணியாற்றிவரும் இவர், பிரதேசத்தின் சிவில் பாதுகாப்புக்குழுக்களை நிறுவி, பிரதேசத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை கண்டறிந்து தடுப்பதற்கு பெரிதும் பங்காற்றி வருவதோடு, தான் கடமை புரியும் பிரதேசத்தை வன்முறையற்ற சிறந்த பிரதேசமாக மாற்றுவதில் பெரிதும் செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY