மூட வழி

0
164

(Mohamed Nizous)

மூடச் சொல்பவரை
மூடன் என்கின்றார்
காட்டச் சொல்பவரை
காட்டான் என்கின்றார்

தகாது பேசுவதும்
தரக் குறைவாய் ஏசுவதும்
ஜிஹாது என நினைத்து
சீறுகிறார் முக நூலில்.

கருத்தை எதிர்ப்பதற்கு
பொருத்தமில்லா வார்த்தைகளால்
ஒருத்தரைக் கேவலமாய்
வருத்துவதா நபி வழி?

ஆராய்ச்சி பிழை என்றால்
ஆண்டவன் மன்னிப்பான்
யாரார்க்கும் ஏசியதை
ஏற்பானா இறைவன்?

கேட்க நாதியற்று
கிடக்கிறது சமூகம்
ஆட்டுவதும் மூடுவதுமா
அடிப்படைப் பிரச்சினை?

இயக்கம் வளர்ப்பதிலும்
எதிர்த்தரப்பை ஒழிப்பதிலும்
மயக்கம் கொண்டாடுகிறார்
மானத்தை போக்குகிறார்.

சொன்னதை எதிர்ப்பதற்காய்
சொன்னவனை இழிவாக்கி
புண்ணியத்தை இழக்கின்றார்
புரியாமல் உளறுகின்றார்.

யாருக்கும் சார்பாக
எழுதவில்லை இவ்விடத்தில்
சீர் தூக்கிப் பாருங்கள்
சீண்ட வேண்டாம் மானத்தை.

LEAVE A REPLY