சிரியாவில் திருமண மண்டபத்தில் வெடிகுண்டு தாக்குதல்: 22 பேர் பலி

0
122

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹசாகே மாகாணத்தில் திருமண மண்டபம் ஒன்றில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தற்கொலைப்படை தாக்குதல் என்று சிரிய மனித உரிமை கண்காணிப்பு மற்றும் மருத்துவ ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

சிரிய ஜனநாயகப் படையை சேர்ந்த உறுப்பினரின் திருமண நிகழ்வில் நடைபெற்ற இந்த வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மணமகனும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

சிரியாவின் வடக்கு பகுதியில் ஐ.எஸ். ஜிகாதிகளுக்கு எதிராக அரபு-குர்தீஷ் கூட்டணியிலான சிரிய ஜனநாயக படை தாக்குதலில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

-Malai Malar-

LEAVE A REPLY