ஆசிரியர்களை வெளி மாகாண பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம்: அவசர பிரேரணை

0
247

(அஹமட் இர்ஷாட்)

இவ்வருடம் கல்வியல் கல்லூரிகளில் இருந்து வெளியாகிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சகல ஆசிரியர்களையும் எக்காரணம் கொண்டும் கிழக்கு மாகாணத்துக்கு வெளியே நியமனம் வழங்கி அனுப்பவேண்டாம். கிழக்கு மாகாணத்தில் இன்று 1108 பாடசாலைகளில் 5022 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் காணப்படும்போது இம்மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை வெளினாகாணத்துக்கு செல்வதை அனுமதிக்க முடியாது.

இதற்கு மிக முக்கிய உதாரணர்மாக நேற்று 03.10.3016 இறக்காமத்தில் 6 பாடசாலைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் பற்றாக்குறை அதற்கான முக்கிய காரணமாகும். எனவே இது யாருடைய பிழை இப்படியான வெற்றிடங்கள் உடனடியாக நிறப்பவேண்டும்.

கிழக்கு மாகாண மாணவர்களின் கல்வியில் வீழ்ச்சியை கொண்டுவர ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். கிழக்கில் இருந்து செல்லும் ஆசிரியர்களின் வழிகாட்டலில் கற்கும் மாணவர்கள் தேசத்தில் முதலிடம் பெறும்போது குறிப்பிட்ட ஆசிரியர்களின் ஊர்களில் பரீட்சைகளிப் பெறுபேறுகளோ மிகவும் மோசம்.

எனவே இவ்வருடம் கல்விக்கல்லூரிகளில் இருந்து வெளியேறிய சகல ஆசிரியர்களையும் கிழக்கு மாகாணத்திலேயே நியமிக்க கல்வி அமைச்சு மற்றும் முதலமைச்சர் இணைந்து அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும் என வருக்கின்ற வியாழக் கிழமை நடை பெற இருக்கின்ற கிழக்கு மாகாண சபை அமர்வில் புல்மோட்டை அன்வர் அவசர பிரேரணை ஒன்றினை சமர்பிக்க உள்ளார்.

LEAVE A REPLY