பைத்துல்லாவுடன் சேர்த்து 26 சகோதரர்கள் கொலை செய்யப்பட்டமை இரத்தத்தால் எழுதப்பட வேண்டிய வரலாறாகும்: புல்மோட்டை அன்வர்

0
623

(அஹமட் இர்ஷாட்)

எமது 26 முஸ்லிம் சகோதரர்கள் மூதூரிலே வைத்து கொலை செய்யப்பட்டும், அதனோடு சேர்த்து கின்னியா பிரதேசத்தினை சேர்ந்த பைத்துல்லாவின் உயிர் பறிக்கப்பட்ட துயர சம்பவமானது இம்மாதாம் இரண்டாம் திகதியோடு 16 வருடங்களை தாண்டிய நிலையிலும் எங்களின் நெஞ்சினை விட்டகளாத துயர சம்பவமாகவே நாங்கள் பார்க்க வேண்டிய விடயமாக உள்ளதாகவும், அவர்களின் சுவன வாழ்க்கைக்காக பிரார்த்திப்பது சகல முஸ்லிம்களின் கடமைப்பாடு என பைத்துல்லாவும் 16 முஸ்லிம் சகோதரர்களும் கொலை செய்யப்பட்டு 16 வருடங்கள் பூர்த்தி அடைந்துள்ளமையின் நினைவாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் புல்மோட்டை அனவர் தெரிவித்துள்ள கருத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த பைத்துல்லாவின் கொலை சம்பவம் சம்பந்தமாக தனது கருத்தினை தெரிவித்த அன்வர்..

கடந்த இரண்டாயிரமாம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் திகதி சகோதரர் பைத்துல்லாஹ் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக பொதுத்தேர்தலில் களமிறக்கப்பட்ட வேலையில் மூதூர் கலாச்சார மண்டபத்தில் வைத்து விடுதலை புலிகளின் தற்கொலை பிரிவினரினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதுடன், மூதூரினை சேர்ந்த முஸ்லிம் காங்கிரசின் 26 ஆதரவாளர்களும் அச்சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட வரலாறு என்பது இன்றும் எங்களினுடைய நெஞ்சில் இருந்து நீங்காத வடுவாகவே இருக்கின்றது.

இந்த நிலையிலே எங்களினுடைய முஸ்லிம்களின் வரலாற்றிலே மாமனிதர் அஸ்ரஃப் அரநாயக்காவில் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டமை, உடதளவின்னை இளைஞர்களினுடைய படுகொலை போன்றவைகள் எங்களின் நெஞ்சினை விட்டகளாத நிழலாக ஆடிக்கொண்டிருக்கின்றது.

அது மட்டுமல்லாமல் திருகோணமலை மாவட்டத்திலேயே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காக உயிர் நீத்த பிரதேசமாக மூதூர் பிரதேசம் காணப்படுகின்றது. குறித்த கொலை சம்பவமானது திருகோணமலை மாவட்டத்தில் மட்டுமல்லாது தேசியத்தில் வாழுக்கின்ற ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் அதிர்ச்சிகுள்ளாக்கிய நாளாகவே பார்க்கப்படுகின்றது.

இவ்வாறான நிலைமை என்பது முஸ்லிம்கள் கடந்த மூன்று தசாப்தகாலத்தில் இடம் பெற்ற யுத்தத்திலே முஸ்லிம்களும் பாரிய அழிவிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கும், அரசியல் ரீதியாகவும் சமுக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரும் சான்று பகிர்ந்து நிற்கின்றது.

எங்களினுடைய மாவட்டத்தினை பொறுத்த மட்டில் அஷ்ஷஹீத் பைத்துல்லா என்பவர் பொலீஸ் அதிகாரியாக பெரும் உயர்ந்த பதவியினை வகித்திருந்த கால கட்டத்திலே மக்களுக்கு அதிக சேவையினை செய்திருந்தார். அது மாத்திரமல்லாமல் மறைந்த மாமனிதர் அஸ்ரஃப் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டும், திருகோணமலை மாவட்டத்திற்கு பொருத்தமானவர் என்றும் கருதி வேட்பாளராக நியமிகப்பட்டு திருகோணமலையிலிருந்து மூதூர் பிரதேசத்திற்கு சென்று கொண்டிருந்த வேலையில்தான் விடுதலை புலிகளின் தாக்குதளுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

எனவே திருகோணமலை மாவட்டத்திலே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை வளர்ப்பதற்கு உரமிட்டதிலே பிரதானமான பங்கினை வகித்துள்ள சகோதரர் பைத்துல்லாவும், மூதூர் பிரதேசத்தினை சேர்ந்த எமது கட்சிக்கு ஆதரவளித்த அஷ்ஷஹீதுகளான 26 சகோதரர்களும் தாக்கப்பட்டு துடிக்க கொலை செய்யப்பட்ட சம்பவம் என்பது இன்னும் எங்களின் மனதினை விட்டு நீங்காத நிழலாகவே ஆடிக் கொண்டிருக்கின்றது.

ஆகவே இத்தருணத்தில் நாங்கள் அக்கட்சியில் இருக்கின்ற பிரதி நிதிகள் என்ற அடிப்படையில் எனக்கும் அவர்களை நினைவு கூர்வதில் தார்மீக பொறுப்பு இருக்கின்றது. ஆகவே திருகோணமலை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களும் இலங்கை வாழ் முஸ்லிம்களும் அவர்களுடைய மறுமை வாழ்விற்காக பிரார்தனைகளில் ஈடுபட வேண்டும்.

அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு முஸ்லிம்களும் குறித்த சம்பவத்தினை ஞாபகப்படுத்த வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. ஏன் என்றால்? இவ்வாறு திருகோண்மலை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் உயிர்களை தியாகம் செய்து, பொருளாதாரத்தினை இழந்து, குடும்பங்களை இழந்து வளர்த்த கட்சி முஸ்லிம் காங்கிரஸ் என்பதற்கு பைத்துல்லாவின் கொலை சம்பவமானது பிரதானமான அடிச்சுவடாக இருக்கின்றது.

அதே போல் இந்த வரலாற்று சுவடென்பது திருகோண்மலை முஸ்லிம்களினுடைய வரலாற்றில் இரத்தத்தால் எழுதப்பட வேண்டிய விடயமாகும். ஆககே குறித்த சம்பவத்தினை ஞாபகப்படுத்துவதில் நான் பெருமகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில் குறித்த அஷ்ஷஹீதுகளின் மறுமை வாழ்வு ஒளிமயமாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ்வினை பிரார்த்திப்பதாக புல்மோட்டை அன்வர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆடியோ பைத்துலாவின் கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக அன்வரின் கருத்து:-

LEAVE A REPLY