யாரோ முயற்சி எடுக்கின்ற வேலைத்திட்டங்களுக்கு பெயர் வைக்கின்ற எந்த தேவையும் எங்களுக்கு கிடையாது: ஹிஸ்புல்லாஹ்

0
762

whatsapp-image-2016-10-03-at-13-39-33(முஹம்மட் பயாஸ்)

காத்தான்குடி கடற்கரை “மெரைன்ட்ரைவ்” காபட் வீதியின் நடைபாதைக்கான ஆரம்ப நிகழ்வு நேற்று (03) இடம்பெற்றது.

கடற்கரை வீதியில் வாகனங்கள் பயணிக்கும் வேளையில் விடுமுறையை கழிப்பதற்க்கு வரும் மக்கள் நடந்து தங்களது விடுமுறையை கழிப்பதற்கும் உடற்பயிற்ச்சிக்காக பயன்படுத்துவதற்கும் ஏற்ற வகையில் இந்நடைபாதை அமைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் மீழ்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு இதற்கான அடிக்கல்லை நட்டு வைத்தார்.

இதன் போது உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,

“யாரோ முயற்ச்சி எடுக்கின்ற வேலைத்திட்டங்களுக்கு அடிக்கல் நடுகின்ற, பெயர் வைக்கின்ற திறந்து வைக்கின்ற எந்த தேவையும் எங்களுக்கு கிடையாது.

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களுடைய தலைமையிலே கடந்த காலங்களை விட அதிகமான வேளைத்திட்டங்களை நாம் செய்வதற்கான நிதி ஒதுக்கீட்டினை செய்து இருக்கின்றோம்.

கடந்த காலங்களில் இப்பிரதேசம் மட்டுமல்ல மட்டு மாவட்டம் பூராகவும் நாம் பல்வேறுபட்ட அபிவிருத்திப் gணிகளை செய்து இருக்கின்றோம். பல கோடிக்கணக்கான நிதிகளை கல்வித்தேவைக்காக ஒதுக்கி இருக்கின்றோம்.

குறிப்பாக இளைஞர்கள், பெரியோர்கள் உடற்பயிற்சி செய்யும் விதத்தில் இவ்வேளைத்திட்டத்திட்டம் ஆரம்பித்து வைத்து அபிவிருத்திப்பணிகளை செய்ய இருக்கின்றோம்.

யாரும் இது பற்றி தவறான வீனற்ற கதைகளை பேச வேண்டிய அவசியமில்லை. இந்நாட்டிலே அமைதியான நிம்மதியான சூழ்நிலை ஏற்படுவதற்க்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் பல்வேறுபட்ட வேளைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார்கள்.

கெளரவ பிரதமர் அவர்களுடைய தலைமையிலே அரசியல் அமைப்பு குழு அமைக்கப்பட்டு அரசியல் தீர்வொன்றினை முன்வைப்பதற்க்கு அரசாங்கம் முயற்ச்சித்துக் கொண்டிக்கின்றது.

குறிப்பாக வட, கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு தங்களது அரசியல் உரிமைகளை பெற்றுக்கொண்டு சகல அதிகாரங்களும் கொண்ட மாகானசபைகள் இந்த நாட்டிலே செயற்படுவதன் ஊடாக இந்த நாட்டிலே சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என அரசாங்கம் நம்புகிறது.” இவ்வாறு தனது உரையினை தொடர்ந்தார்.

இதன் போது முன்னாள் கிழக்கு மாகான சபை உறுப்பினர் KLM.பரீட், முன்னாள் காத்தான்குடி நகரபிதா SHM.அஸ்பர், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இனைப்புச்செயளாலர் றுஸ்வின் முஹம்மட், காத்தான்குடி அரசியல் களம் வட்ஸ்அப் குழும பணிப்பாளர் AG.ரிஸ்வி, அஸாபியா பஸீர் ஹாஜியார் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY