ஒரு கோடி ஐம்பது லட்சம் செலவில் காத்தான்குடி மில்லத் மகளீர் வித்தியாலயத்திற்கு 3 மாடி கட்டிடம்..!

0
159

whatsapp-image-2016-10-03-at-20-52-16(முஹம்மட் பயாஸ்)

காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு சுமார் ஒரு கோடி ஐம்பது லட்சம் பெறுமதியான 18 வகுப்பறைகளை கொண்ட 3 மாடி கட்டிடத்திற்கான வேலைகள் இன்று (03) அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் ஜெஸிமா முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மீழ்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு இதற்கான வேலைகளை அங்குரார்ப்பனம் செய்து வைத்தார்.

millath-school-1இதன் போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பாடசாலை சமூகத்தினால் இராஜாங்க அமைச்சருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டடது.

பாடசாலை மாணவிகளினால் சிறப்பு கலை நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வுகளில் பங்கேற்ற இராஜாங்க அமைச்சரினால் சிறப்பு உரை ஒன்றும் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் சேகு அலி SLAS, பிரதேச கல்வி அதிகாரி MACM. பதுர்தீன், காத்தான்குடி முன்னாள் நகர முதல்வர் SHM. அஸ்பர், அஸாபியா பசீர் ஹாஜியார், இராங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச்செயளாலர் றுஸ்வின் முஹமட் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

millath-school-2

LEAVE A REPLY