மூதூரில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடாத்த முயற்சி

0
91

mutur(ஹஸ்பர் ஏ. ஹலீம்)

திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜின்னா நகர் கொங்ரீட் வீதியின் ஊடாக பிரபல சிரேஷ்ட ஊடகவியலாளர் செய்தி சேகரிக்கச் சென்று திரும்பும் வழியில் இன்று (03) மாலை 05.10 மணியளவில் தாக்க முற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த ஊடகவியலாளர் வரும் வழியில் கொங்ரீட் வீதியில் வீதியை மறித்து கொட்டப்பட்ட கிரவலை பார்த்து ‘இது எப்போது கொட்டப்பட்டது’ என கேட்ட போதே தகாத வார்த்தையினால் ‘நீ எங்கே சொன்னாலும் சரி ஓஐசி, ஏஸ்பி, டிஸ் யாருக்குட்ட வேண்டுமானாலும் சொல், என்னை யாரும் கேட்க முடியாது. மூதுாரான் கூட கேட்கவில்லை, நீ கிண்ணியாக் காரன் உனக்கு கதையில்லை, நாங்கள் 30 நாளைக்கும் வீதியை மறித்து கிரவல் கொட்டுவோம்’ எனவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து குறித்த ஊடகவியலாளர் ஊடக ஒழுக்க விதிக்கமைய நிதானமாக திரும்பியுள்ளார்.

மக்கள் பிரச்சினைகளை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்கள் இவ்வாறு அச்சுருத்தப்படுவது தொடர்பில் உடனடியாக குறித்த நபருக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்.

ஊடகத்துறையை தர்மமாக கொண்டு கடமையாற்றும் ஊடகவியலாளர் அச்சுறுத்தப்படுவதை வன்மையாக கண்டிக்க வேண்டும். இதனை மாவட்ட தேசிய ஊடக அமைப்பு ஊடாக கடுமையான சட்ட நடவடிக்கைக்கு குறித்த நபர் உட்படுத்தப்பட வேண்டும்.

LEAVE A REPLY