மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்கள் சந்திப்பு

0
1073

(எம்.எஸ்.எம். ஸாகிர்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம் பிரதிநிதிகளை எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு பத்தரமுல்லை, நெளும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ அலுவலகத்தில் இந் நிகழ்வு இடம்பெறவிருக்கின்றது. திறந்த அழைப்பாக அனைத்து முஸ்லிம் பிரதேச சபை உறுப்பினர்கள், முஸ்லிம் வர்த்தகர்கள், வழக்கறிஞர்கள் என்று அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY