மூதுாரில் காட்டு யானைகளினால் பயிர்கள் சேதம்

0
165

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

மூதுார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜின்னா நகர் பகுதிக்குள் நேற்று ( 02 ) இரவு09.00 மணியளவில் காட்டு யானை ஊருக்குள் நுழைந்துள்ளதுடன், பயிர்கள் சேதம் செய்யப்பட்டுள்ளதுடன் பிரதேச மக்கள் பீதியில் ஓடிய சம்பவம் நிகழ்ந்ததாக அவ்வுர் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால் தாங்கள் குடிசையில் இருப்பதனால் இரவு நேரங்களில் நிம்மதியாக துாங்க முடியாது எனவும், மேலும் தெரிவிக்கின்றனர். எனவே இதனை கட்டுப்படுத்த உரிய அரச அதிகாரிகள் கவனத்திற் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY