நாடு பூராகவும் நியமிக்கப்பட்டுள்ள காதீ நீதிபதிகளின் கொடுப்பனவுகள் அதிகரித்து வழங்கப்படுமா?

0
234

-அப்ஹம் என் ஷபீக் –

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாளை (4ஆம் திகதி ) பாராளுமன்றத்தில் கேள்வி எழுபிக்கின்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எச்.எம் சல்மான் மேற்படி விடயம் சம்பந்தமாக கேள்வி எழுப்பவுள்ளார் .

முஸ்லிம் விவாகம் ,விவாக ரத்துகள் சட்டத்தின் கிழ் ,நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் நாடுபூராவும் நியமிக்கப்பட்துள்ள காதீ நீதிபதிகளுக்கு பல்லாண்டு காலத்துக்கு முன்பிலிருந்தே வழங்கப்படுகின்ற கொடுப்பணவுகள் மொத்தம் ரூபா 11,000/- மாத்திரமே ஆகும் . அதில் ரூபா 5000/ எழுதுனர் சேவைகளுக்கும் , மிகுதி ரூபா 6000 /- காதி நீதிபதிகளுக்குமான கொடுப்பனவாகவே வழங்கப்படுகின்றது .

காதீ நிதிபதிகளின் சேவைகள் பகுதி நேர சேவையொன்று கருதியே குறைந்த கொடுப்பனவை வழங்கிய போதிலும் அவர்கள் காலங்கள் முழுவதுமே தனது சேவையை நிறைவேற்றி வருகின்றனர் .

தற்போதைய வாழ்க்கைச் செலவுகள் ,ஜுரி சபைக்கான அங்கத்தவர்களது அற்பணிப்பு, அலுவலக வசதிகள் , மற்றும் போக்குவரத்து வசதிகள் போன்றவைகளை கவனிக்கும் பட்சத்தில் மேற்படி வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் போதாத நிலையை கவனித்தில் கொண்டே பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பபடுகின்றன.

தற்போதைய நல்லாட்சியின் கிழ் நீதிச்சேவைகள் ஆணைக்குழு நீதியமைச்சரின் கீல் இயங்கிய போதிலும், கடந்த ஆட்சியில் முன்னாள் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டிலே தான் அவ் ஆணைக்குழு இயங்கியது .

நீதிசேவைகள் ஆணைக்குழுவே காதீ நீதிபதிகளின் கொடுப்பனவுகள் சம்பந்தமான சிபாரிசுகளை நீதியமைச்சுக்கு வழங்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே இது சம்பந்தமான நடவடிக்கைகளை நீதி அமைச்சுக்கு எடுக்க முடியும் என்பதும் குறிப்பிட தக்கது .

LEAVE A REPLY