(Video) சிறுவர் தினத்தில் தங்களின் உரிமைகளுக்காக வீதிக்கு இறங்கிய ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலைய சிறுவர்கள்

0
134

(அஹமட் இர்ஷாட்)

20161003_093854சிறுவர்கள் உரிமைகளுக்காகவும், நாட்டிலே இடம் பெறும் சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு எதிராகவும், சிறுவர்களுக்கு கல்வியில் சம உரிமை வழங்க கூறியும் சிறுவர் தினத்தினை முன்னிட்டு ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலைய சிறுவர்கள் ஓட்டமாவடி கிராமத்தினை சுற்றி நடைபவணியாக தங்களது எதிர்ப்பினையும் தெரிவித்து, உரிமைகளுக்காக குரலும் எழுப்பிய நிகழ்வானது எல்லோருடைய கவனத்தினையும் ஈர்த்த விடயமாக பிரதேசத்தில் பார்க்கப்படுகின்றது.

ஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினமாக பிரகடணப்படுத்தப்பட்டிருந்தும் அன்றைய தினம் பாடசாலைகளுக்கான விடுமுறை தினமாக இருந்ததினால் இன்று (03) திங்கட்கிழமை பாடசாலை நிருவாகத்தினால் குறித்த சிறுவர் தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடதக்க விடயமாகும்.

20161003_093555 etyh het

LEAVE A REPLY