திருகோணமலைக்கு ரோட்டரி ஆளுநர் சேனக அமரசிங்க வருகை

0
46

(அப்துல்சலாம் யாசீம்)

ரோட்டரி மாவட்ட – 3220 ஆளுநர் சேனக அமரசிங்க 02-10-2016 அன்று திருகோணமலை ரோட்டரி கழகத்துக்கு விஜயம் செய்தார். உதவி ஆளுநர் ஆத்ம ராம் அவர்களும் அவருடன் இணைந்து கொண்டார் .

திருகோணமலை ரோட்டரி கழக தலைவர் – திரு ச சிவசங்கர் விருந்தினர்க களை வரவேற்றார் . செயலாளர் சுரேஷ் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைகள் பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை கொடுத்தார்.

இரண்டு புதிய உறுப்பினர்கள் திருகோணமலை ரோட்டரி கழகத் தில் இணைந்து கொண்டார்கள். இரண்டு துவி சக்கர வண்டிகள் இரண்டு மாணவர்களுக்கு தங்கள் படிப்பை மேம்படுத்த ரோட் டேரியான் அகிலன் உதவியுடன், வழங்கப்பட்டது.

ஆளுநர் சேனக அமரசிங்க திருகோணமலை ரோட்டரி கிளப் நடவடிக்கைககளை பாராட்டியதுடன் மேலும் அதிக உறுப்பினர்களை சேர்க்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அவர் மரம் நடும் திட்டத்தை செயல் படுத்துவதில் அதிக கவனம் செலுத்தும் படி கேட்டு கொண்டார் மற்றும் சாதனை ரோட்டரி கழகத் தின் பெரிய சாதனையான போலியோ இல்லாத உலகம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும்படி கேட்டுக் கொண்டார். செயலாளர் சுரேஷ் நன்றியுரை வழங்கினார்.

LEAVE A REPLY