மாடுகளை திருட்டுத்தனமாக கொண்டு சென்ற மூன்று நபர்கள் கைது

0
527

(அப்துல்சலாம் யாசீம்-)

ஹொரவ்பொத்தானை-துடுவெவ பகுதியிலிருந்து 75 மாடுகளை திருட்டுத்தனமாக கொண்டு சென்ற மூன்று சந்தேக நபர்களை இன்று (03) கைது செய்துள்ளதாக ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை-ரொட்டவெவ பகுதியைச்சேர்ந்த அபூபக்கர் ரபீக் (45 வயது) சாவுல் ஹமீட் சஹிர்தீன் (36வயது) மற்றும் ஹொரவ்பொத்தானை-துடுவெவயைச்சேர்ந்த ஐயதிலகே ஜீவர்ந்த ஜெயதிலக (23வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது துடுவெவ பிரதேசத்திலுள்ள மாடுகள் மேய்ச்சலுக்காக சென்ற போது காட்டு வழியூடாக கன்தளாய் பகுதிக்கு சாய்க்கப்பட்டு விற்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை கெப்பித்திகொள்ளாவ நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தவுள்ளதாகவும் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY