காத்தான்குடி பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளராக எஸ்.எல்.எம்.ஹனீபா நியமிப்பு

0
341

ds-haneefa(விஷேட நிருபர்)

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளராக இன்று (03) திங்கட்கிழமை தொடக்கம் ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா நியமிக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் அவுஸ்ரேலியாவில் நடைபெறும் சிறுகைத்தொழில் ஊக்குவிப்பு தொடர்பான செயலமர்வில் கலந்து கொள்வதற்காக 30.9.2016 அன்று அவுஸ்த்ரேலியா சென்றுள்ளதால் அவர் வரும் வரை இன்று (3.10.2016) தொடக்கம் எதிர் வரும் 11.11.2016 வரை ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா காத்தான்குடி பதில் பிரதேச செயலாளராக கடமையாற்றுவார்.

இன்று திங்கட்கிழமை பதில் பிரதேச செயலாளர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

LEAVE A REPLY