கிண்ணியாவில் விவசாயிகளினால் வீதியை மறித்து கவனயீர்ப்பு போராட்டம்

0
246

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாழைமடு செம்பிக்குளம் பனிச்சங்குளம் ஆகிய விவசாய சம்மேளனத்திற்குட்பட்ட தடை உத்தரவை நீக்குமாறும் கோரி பல் வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிண்ணியா பிரதேச செயலகம் முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் இன்று(03) நடைபெற்றது.

இதில் தடை செய்யப்பட்ட விவசாய உர மானியங்களை வழங்குவதுடன்873 விண்ணப்பித்த விவசாயிகளின் உரமானியத்தை வழங்கவும் காணிக்கச்சேரி நடத்தி தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கல் தரிசி நிலமாக இருக்கும் காணிகளை விவசாயம் செய்ய அனுமதி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கவனயீரப்பு முன்னெடுக்கப்பட்டது.

மேலும், இதனை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், கிண்ணியா பிரதேச செயலாளர் முன்னிலையில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இல்லாத பட்சத்தில் தங்களது போராட்டம் தொடரும் என விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.

LEAVE A REPLY