பந்து தாக்கியதில் ஷிகர் தவான் காயம்

0
132

கொல்கத்தா டெஸ்டில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயமடைந்தார். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் வீசிய பவுன்சர் பந்து ஒன்று, தவானின் இடது கையை பலமாக பதம் பார்த்தது. பெருவிரலில் பந்து தாக்கியதில் வலியால் துடித்தார். இருப்பினும் சமாளித்து விளையாடிய அவர் 17 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதன் பின்னர் காயத்தன்மை குறித்து அறிய அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவு இன்னும் வரவில்லை. என்றாலும் எஞ்சிய தொடரில் தவான் விளையாடுவது சந்தேகம் தான். அவர் மூன்று வாரம் ஓய்வு எடுக்க வேண்டி வரலாம்.

LEAVE A REPLY